News March 24, 2025
சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
Similar News
News January 11, 2026
காஞ்சி: 3 பேர்க்கு அதிரடி சிறை!

காஞ்சிபுரத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்குப் போக்ஸோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. 2018-ல் நடந்த இச்சம்பவத்தில், தங்கராஜுக்கு 7 ஆண்டுகள் சிறையும், அன்பரசன் மற்றும் சிவதாஸுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது. மேலும், மூவருக்கும் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டார்.
News January 11, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சேலத்தைச் சேர்ந்த சஞ்சீவி (24), தனது நண்பர்கள் தமிழரசன் மற்றும் வீரமணியுடன் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு வேன் மீது பைக் மோதியதில், சஞ்சீவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.11) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


