News April 26, 2025
சென்னை “Knights on Night Rounds” விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (26.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News December 23, 2025
சென்னை மக்களே கொண்டாட்டத்துக்கு ரெடியா?

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை வெளிப்படுத்தும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 14, 2026 மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
கிறிஸ்துமஸ் பண்டிகை: மின்சார ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கடற்கரை -செங்கல்பட்டு, சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி 2மணி வரை செயல்படும்.
News December 23, 2025
சென்னை: புது மனைவியை கொன்ற கணவன்!

சென்னை குன்றத்தூரில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 9 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கு குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கணவர் காதல் மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


