News March 20, 2024
சென்னை: 7 நாளில் 60 பேர் கைது!

பெருநகர சென்னை மாநகராட்சி காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் கடந்த மார்ச் 12ம் தேதியிலிருந்து 19ம் தேதி வரை 7 நாளில் போதைப்பொருள் விற்றதாக 34 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 120 கிலோ கஞ்சா, 364 போதை மாத்திரைகளை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News August 31, 2025
சென்னை: வற்றாத செல்வம் பெற இங்க போங்க!

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
News August 31, 2025
சென்னை வாசிகளுக்கு முக்கிய எண்!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகள் அனைத்துமே வாட்ஸ் அப் வாயிலாக வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது உள்பட 34 சேவைகளை பெறலாம். “9445061913” இந்த வாட்ஸ்-அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். (SHARE)
News August 31, 2025
BREAKING: சென்னையில் டீ, காபி விலை உயர்வு

சென்னையில் நாளை(செப்.1) முதல் டீ, காபி விலை உயர்த்தி விற்கப்படும் என டீக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, ▶️பால் – ரூ.15, ▶️லெமன் டீ – ரூ.15, ▶️காபி – ரூ.20, ▶️ ஸ்பெஷல் டீ – ரூ.20, ▶️ ராகி மால்ட் – ரூ.20, ▶️சுக்கு காபி – ரூ.20, ▶️பார்சல் டீ – ரூ.45, ▶️பார்சல் காபி -ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (டீ, காபி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க)