News April 30, 2024
சென்னை ரயில், காட்பாடி வரை மட்டுமே செல்லும்

கோவையிலிருந்து ஏப்.30ம் தேதி காலை 6.20 மணிக்கு புறப்படும் இன்டா்சிட்டி விரைவு ரயில் சென்னை செல்லாமல் காட்பாடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில், அதே நாளில் சென்ட்ரலுக்கு பதிலாக காட்பாடியிலிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வந்தடையும் என இன்று (ஏப்ரல்.30) சேலம் கோட்ட ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 21, 2025
கோவை: பவானி ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் குமார்(25). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது நண்பர்களுடன், கோவை மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர், மது போதையில் அருகில் உள்ள சிவன் கோவில் பவானி ஆற்றில் குளித்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், அவரால் நீந்தி கரைக்கு வர முடியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 21, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (20.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சாமிநாதன் கயல்விழி, பவன்குமார் க.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கூலி உயர்வு பிரச்சனை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.