News May 16, 2024
சென்னை ரயிலில் புதிய வசதி அறிமுகம்

சென்னைக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் ரூ.50 டிக்கெட் கட்டணத்தில் தற்போது கழிவறை அற்ற ரயில் சேவை இயக்கப்படுகிறது. காலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் புறப்படும் ரயில், 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.
மறுமார்க்கமாக மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 12 மணிக்கு சென்றடையும். 6 மணி நேரம் பயண தூரம் கொண்ட வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயிலில் தற்போது கழிவறை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Similar News
News February 19, 2026
அபாயத்தில் சென்னை; ஆய்வில் அதிர்ச்சி!

சென்னை ஐஐடி சார்பில் ஒலி மாசு குறித்து கடந்த 8மாதங்களாக சென்னையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சென்னையில் உள்ள 15மண்டலங்களில் நடத்திய ஆய்வில் வளசரவாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் அபாயகரத்தில் ஒலி மாசு அதிகம் இருப்பதும், அடையாறு, மணலி மண்டலங்களில் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கட்டுமான பணி, போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
சென்னையில் பட்டப்பகலில் சரமாரி அரிவாள் வெட்டு!

திருவொற்றியூர் தனியார் நிறுவன ஊழியரான வினோத்குமாரை, நண்பர் ஜெய்ஷயாம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் வினோத்குமாரின் வயிறு, தொடைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தாக்குதல் நடத்திய ஜெய்ஷயாம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிய வினோத்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
News February 18, 2026
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (பிப்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


