News May 17, 2024
சென்னை: மேலும் 4 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங்!

தி.நகரில் தனியார் பராமரிப்பில் மல்டி லெவல் பார்க்கிங் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது 10 இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. மேலும் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலை, ஷெனாய் நகர், வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 4 இடங்களில் ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
Similar News
News December 4, 2025
சென்னையை எட்டி பார்க்கும் சூரியன்!

சென்னையில் 5 நாட்களுக்குப்பின், மீண்டும் சூரிய ஒளி ஆங்காங்கே படர்ந்து வருகிறது. சென்னையின் சில பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரும் வடிய தொடங்கிவிட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலு இழந்ததால் இரவு முதலே மழை குறைய தொடங்கிவிட்டது. இன்று மாலை வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேரு இடங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
News December 4, 2025
நாடு முழுவதும் இன்டிகோ விமான சேவை ரத்து – பயணிகள் அவதி

இன்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகள், பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்நாட்டு, பன்னாட்டு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மட்டும் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் வாக்குவாதம் ஏற்பட்டது. திருச்சியிலிருந்து சிங்கப்பூர், துபாய் செல்லும் சேவைகளும் ரத்து. பயணிகளுக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டு வருகின்றன.
News December 4, 2025
சென்னை ஐகோர்ட்டில் வேலை; ரூ.50,000 சம்பளம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 28 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டம் படித்த 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.50,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


