News April 2, 2025
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிப்போரது எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. அந்த வகையில், நடப்பாண்டில் (2025) மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பேர் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக, மார்ச் 7ஆம் தேதி அன்று 3 லட்சத்து 45 ஆயிரத்து 862 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர். குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை டிக்கெட்டிற்கு 20% தள்ளுபடி செய்கிறது.
Similar News
News April 9, 2025
கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 9, 2025
அதிகளவு புரோட்டீன் பவுடர் சாப்பிட கூடாது

வேகமாக உடற்கட்டழகை கொண்டு வருவதற்காக, அதிகளவு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்ட இளைஞர் சென்னையில் உயிரிழந்தார். அதிகளவு புரோட்டீன் பவுடரால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களைத் தூண்டும். பால் மற்றும் சர்க்கரையை செரிமானம் செய்வதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இரைப்பை மற்றும் குடல் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும். உணவு மூலமா புரதத்தை எடுத்துக்கொள்வது நல்லது.
News April 9, 2025
வேலைவாய்ப்பற்றவர்களுக்கு உதவித்தொகை 2/2

பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.