News August 17, 2024
சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் 1913 என்ற புகார் தெரிவிக்கும் சேவையில், புகார்களுக்கு மாநகராட்சியால் தீர்வு காணப்பட்டதை புகார்தாரரிடம் உறுதி செய்த பிறகே அந்த புகாரை முடிக்க வேண்டும் என்று அம்மையத்தின் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைத்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 15, 2025
சென்னை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News November 15, 2025
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி!

பீகாரை சேர்ந்த மானவ்பஸ்வான் (48) எர்ணாகுளம் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தார். அப்போது, திருவொற்றியூர்-வ.உ.சி.நகர் அருகே வந்த போது, ரயிலில் படிக்கட்டுகளில் இருந்தவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிருந்தவர்கள் ரயில் செயினை நிறுத்தியவுடன், ரயில்வே போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
News November 15, 2025
சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் அத்துமீறல்!

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த பெண், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின்ராஜ் (25) என்பவருடன் மொபைல் செயலி மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை வைத்து மிரட்டி, லிபின்ராஜ் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரின் புகைப்படத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்பேரில், போலீசார் லிபின்ராஜை கைது செய்தனர்.


