News August 11, 2024
சென்னை மக்களுக்கு காவல்துறையின் குறை தீர்க்கும் முகாம்

சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் குறை தீர் முகாம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாரமும், புதன்கிழமை காலை 11.00 மணி முதல் 1 மணி வரை வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்கள் மனுக்களை ஆணையரிடம் நேரில் அளிக்கலாம்.
Similar News
News November 19, 2025
சென்னையில் 2 வாரங்களில் டிஜிட்டல் பஸ் பாஸ் அறிமுகம்

மாநகரப் பேருந்துகளுக்கான டிஜிட்டல் பாஸ் முறை இன்னும் 2 வாரங்களில் அறிமுகமாகிறது. ‘சென்னை ஒன்’ செயலி மூலம் பெறக்கூடிய இந்த பாஸ் ரூ.1000, 2000 என இரு விலைகளில் கிடைக்கும். இவை வாங்கிய நாளிலிருந்து 30 நாட்களுக்குச் செல்லும். பயணிகள் பேருந்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து பயணிக்க வேண்டும் என சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குடும்பம் (CUMTA) தெரிவித்துள்ளது.
News November 19, 2025
சென்னையில் பெண் மருத்துவர் தற்கொலை… போலீஸ் அதிரடி

சென்னை முகப்பேரில் பெண் மருத்துவர் ஹாருள் சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹாருள் சமீராவை வரதட்சணை கேட்டு அசாருதீன் துன்புறுத்தியது, ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசாருதீனை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
News November 19, 2025
விசிகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: திருமா

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என விசிக எம்பி ரவிக்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் நேற்று (நவ.18) செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால், வரும் 2026 தேர்தலில் அது எங்கள் கோரிக்கையாக இருக்காது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம்” என்றார்.


