News March 22, 2024
சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

சென்னையில் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இந்நிலையில் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரியும் ஒரு காரணம் என சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 18, 2025
மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றி பார்க்கலாம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் மற்றும் புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 18) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
News April 18, 2025
இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் நடவடிக்கை

சென்னை மாநகரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகவும் பாதுகாப்புடனும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட ‘இளஞ்சிவப்பு’ ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்களே ஓட்ட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ. மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறை எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்.
News April 18, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.