News August 6, 2024
சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் இன்று 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், திருவல்லிகேணி, எழும்பூர், அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News December 6, 2025
சென்னை: கல்லூரி மாணவி கடத்தல்.. போலீஸ் அதிரடி

சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 50 வயது நபரின் 19 வயது மகளை, நேற்று கல்லூரி முடித்து வீடு திரும்பும் வழியில், காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் நொளம்பூர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்தது. போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் காரை பின் தொடர்ந்து, திண்டிவனம் அருகே பெண்ணை பத்திரமாக மீட்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட ஷியாம் சுந்தர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
News December 6, 2025
சென்னைக்கு மழை எச்சரிக்கை!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & புறநகர் பகுதியில் அடுத்த 48மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஒரு சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.