News August 3, 2024
சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்குக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.exam.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 3, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் & பராமரித்தல் பணிகளுக்கு, வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தை டிச.17-க்குள் சமர்ப்பிக்கலாம். விரிவான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.
News December 3, 2025
சென்னையில் சைபர் கிரைம் மோசடி: ரூ.2.04 கோடி மீட்பு!

சைபர் கிரைம் மோசடியால் தினந்தோறும் மக்கள் பாதித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 150பேர் சைபர் கிரைம் மோசடி மூலம் இழந்த ரூ.2.04கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சைபர் கிரைமால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 3, 2025
ALERT: சென்னையில் மிக கனமழை பெய்யும்!

சென்னையில் இன்று ( டிச.03) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, திருவள்ளுர், காஞ்சிக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை ஓயப்போவதில்லை. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


