News August 15, 2024
சென்னை நகரை பசுமையாக்கும் சென்னை மாநகராட்சி

பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி இந்த நிதியாண்டில் ஏப்ரல் 2024 முதல் நடப்பட்ட மொத்த மரங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என அனைத்து பகுதிகளிலும் இதுவரை, 14948 மரக்கன்றுகள் மொத்தமாக நடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Similar News
News December 23, 2025
சென்னை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 979 வாக்குச்சாவடி மையங்களில், இன்று 23.12.25 முதல் 18.1.26 வரை (பண்டிகை நாட்கள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மையத்திலும் வாக்குச் சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டு, படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
News December 23, 2025
சென்னை மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 23, 2025
சென்னை மாநகராட்சியில் வேலை வேண்டுமா…

சென்னை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவில் உள்ள நர்ஸ், பார்மிஸ்ட், அலுவலக உதவியாளர், லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 311 இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th முதல் எம்பிபிஎஸ் படித்தவர்கள் என பதவிக்கு ஏற்ப தகுதி மாறுபடும். மாதம் ரூ.10,000- 90,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


