News August 16, 2024

சென்னை துறைமுகத்தில் அரிய வேலை வாய்ப்பு

image

சென்னை துறைமுகத்தில் Executive Engineer வேலைக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளம் <>மூலம் <<>>04.09.2024-க்குள் விண்ணப்ப வேண்டும். மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.160,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Written Exam/Interview மூலம் தேர்வு நடைபெறும்.

Similar News

News December 10, 2025

ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

image

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.

News December 10, 2025

சென்னை: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

image

சென்னை மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 10, 2025

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பெண் ரவுடிக்கு சிறை!

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பிரபல பெண் ரவுடியும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான அஞ்சலைக்கு, வேறொரு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ரியல் எஸ்டேட் தரகரிடம் கந்துவட்டி வசூல், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!