News August 22, 2024
சென்னை தினத்தில் ஜொலிக்கும் மாநகரம்

இன்றைய சென்னை மாநகருக்கு 1996ம் ஆண்டுக்கு முன்பு வரையிலான பெயர் மெட்ராஸ் என்பதாகத்தான் இருந்தது. 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், இதே ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்ட இந்நகரம், இன்று தனது 385வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இன்றைய தினத்தில், சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி, மாரத்தான் போட்டிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
Similar News
News December 8, 2025
சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
“49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்”

சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதில் இன்று மட்டும் 7 மையங்களில் 956 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தியும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டும் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.


