News March 24, 2024
சென்னை சாலையில் திடீர் வெள்ளம்?

சென்னை: போரூர் சிக்னல் அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆறாக சாலையில் ஓடியது. இந்த தண்ணீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
Similar News
News April 19, 2025
சென்னை AC ரயில் குறித்து மக்கள் கருத்து

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை சென்னையில் இன்று (ஏப். 19) தொடங்கியது. இந்நிலையில்,”கட்டணம் அதிகப்படியாக உள்ளது. PEAK HOURS தேவை அடிப்படையில் சேவைகள் இல்லாதது ஏமாற்றம். வெயில் கொளுத்தும் பகல் நேரத்தில் ஏசி சேவை இல்லை. குறைந்த அளவில் ஏசி சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன” உள்ளிட்ட குறைகளை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். *உங்களுக்கு ஏதெனும் குறைகள் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க*
News April 19, 2025
சென்னை: ஜமீன் குடும்பத்தாருக்கு அபராதம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள 45 கிரவுண்ட் நிலத்தை தங்களுடைய குடும்ப சொத்து எனக்கூறி சிவகிரி ஜமீனின் வாரிதாரர்கள் போலியான ஆவணங்களை தயார் செய்து வேறு ஒருவருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர். (ஏப்ரல்19) இவ்வழக்கு விசாரணையில் சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News April 19, 2025
சென்னை மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

தண்டையார்பேட்டை-044-25911727, திருவொற்றியூர்-25991997, புரசைவாக்கம்-25388978, பெரம்பூர்-25375131, மாதவரம்-26590193, அயனாவரம்-26431726, அமைந்தகரை-26201727, அம்பத்தூர்-26252785, எழும்பூர்-28361890, மதுரவாயல்-23861386, மாம்பலம்-24891464, மயிலாப்பூர்-24331292, வேளச்சேரி-22431737, கிண்டி-22351850, ஆலந்தூர்-22320580, சோழிங்கநல்லூர்-24501700. *முக்கியமான எண்களான இவற்றை நண்பர்களுக்கும் பகிரவும்*