News August 16, 2024
சென்னை கோட்டூர்புரத்தில் ஓவியப்போட்டி

சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி, சென்னை 2050, நான் விரும்பும் சென்னை, நானும் சென்னையும் என்ற மூன்று தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் 6 லிருந்து 8-ஆம் வகுப்பு வரை சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. போட்டியானது காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
சென்னையில் இருந்து கேரளாவிற்கு ஆம்னி பேருந்து இயங்காது

சென்னையில் இருந்து நேற்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற 30 க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து கேரள போக்குவரத்து துறை போலீசார் சிறைபிடித்து பொதுமக்களை நடுவழியில் இறக்கிவிட்டனர். 70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளதால் நேற்று இரவு 8 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துள்ளனர்.
News November 8, 2025
FLASH: ரிப்பன் மாளிகையில் போலீஸ் குவிப்பு!

சென்னை, தூய்மை பணியாளர்கள் இன்று 100-வது நாள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 10.30 மணிக்கு பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரிப்பன் மாளிகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கவே போலீஸ் பாதுகாப்பு என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
News November 8, 2025
சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை, SIR குறித்த சந்தேகங்களுக்கு வாக்காளர்கள் விளக்கம் பெற சென்னை மாநகராட்சி தொடர்பு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெரம்பூர்-9445190204, கொளத்தூர்-9445190206, வில்லிவாக்கம்-9445190208, எழும்பூர்-9445190206, இராயபுரம்-7867070540, துறைமுகம்-8778381704, அண்ணா நகர் -9445190208, சேப்பாக்கம்-9445190209, சைதாப்பேட்டை-9445190213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


