News August 26, 2024
சென்னை கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரி நிர்வாகிகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில செயலாளர் டாக்டர் ஜுபைர்கான் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் இரா.அன்வர்கான் (குன்னூர்) பங்கேற்றார். அவருடன் குன்னூர் கிளை செயலாளர் எம்.ஏ.ரகீம், இளைஞரணி சாதிக் பாட்ஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அன்வர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
Similar News
News December 21, 2025
நீலகிரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு வனத்துறை சார்பாக, ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு, கூடலூர் வன கோட்டத்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9894265973, 9080320002 என்ற எண்ணில் அழைத்து பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News December 21, 2025
கூடலூர் அருகே சோகம்: ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் பலி!

கூடலூர் சிவசண்முக நகரை சேர்ந்தவர் வினோத் குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று முந்தினம் சரக்கு ஆட்டோவில், படாந்தொரைக்கு சென்றுவிட்டு, கூடலூர் திரும்பிக்கொண்டிருந்தார். 2ம் மைல் மீனாட்சி பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது, ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோத் குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 20, 2025
நீலகிரி: இதை SAVE பண்ணிக்கோங்க..!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


