News August 9, 2024
சென்னை காவல்துறை ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு

‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ போட்டியை சென்னை போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். ‘விபத்தில்லா தினம்’ தொடர்பாக 60 வினாடிகள் வரை ரீல்ஸ் உருவாக்க வேண்டும். #zeroaccidentday, #ZAD, #safechennai, #GCTP, #zeroisgood என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த வேண்டும், ரீல்ஸ் போட்டியில் முதல் பரிசுத்தொகையாக ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
JUST IN: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். *மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க*
News December 3, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் & பராமரித்தல் பணிகளுக்கு, வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தை டிச.17-க்குள் சமர்ப்பிக்கலாம். விரிவான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.
News December 3, 2025
சென்னையில் சைபர் கிரைம் மோசடி: ரூ.2.04 கோடி மீட்பு!

சைபர் கிரைம் மோசடியால் தினந்தோறும் மக்கள் பாதித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 150பேர் சைபர் கிரைம் மோசடி மூலம் இழந்த ரூ.2.04கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சைபர் கிரைமால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


