News December 31, 2024

சென்னை காவல்துறை புத்தாண்டு வாழ்த்து

image

சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை சுமூகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். 2025ஆம் ஆண்டை மகிழ்ச்சியாக, மற்றவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வரவேற்போம். பாதுகாப்பாக இருங்கள் மற்றும் பொறுப்புடன் மகிழுங்கள் என்று பெருநகர சென்னை காவல்துறை மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Similar News

News December 16, 2025

ஜனவரியில் திறக்கப்படும் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ!

image

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் இடையேயான 9 கி.மீ பாதையில் 2026 ஜனவரியில் ரயில் சேவை தொடங்க உள்ளது. நெரிசல் நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 13 மூன்று பெட்டி ரயில்கள் பயன்படுத்தப்படும் எனவும், இவை ஓட்டுநர் இல்லா தொழில்நுட்பம் கொண்டவை என்றாலும், ஆரம்பத்தில் ஓட்டுநர்களுடனே இயங்கும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 16, 2025

சென்னை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

சென்னையில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு!

image

இன்று (டிச-16) சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை எனில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிபிடதக்கது.

error: Content is protected !!