News April 26, 2025
சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் மாணவ – மாணவிகள் 28 பேர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது ஆழியாறு ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, 4ஆம் ஆண்டு படிக்கும் ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), ரேவந்த் (21), 3ஆம் ஆண்டு படிக்கும் தருண் விஸ்வரங்கன் (19) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Similar News
News November 17, 2025
சென்னை: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்!

சென்னை: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 17, 2025
சென்னை: கணவர் ஓட்டிய கார் மோதி மனைவி பலி

ஆவடியை சேர்ந்த கோனாம்பேடு, ரெட்டிபாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜா- திவ்யா தம்பதி. ராஜா புதிதாக கார் ஓட்டி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு காரை பார்க்கிங் செய்ய வீட்டின் பின் புறம் நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கணவர் ராஜா பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியாதல் திவ்யா மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 17, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்! பள்ளிக்கு விடுமுறையா?

சென்னையில் இன்று (நவ.17) மிககனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் சென்னையில் மழையின் தாண்டவத்தை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.


