News September 15, 2024
சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில்கள் ரத்து

தாம்பரம் ரயில் பாதையில், இன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள், பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகள் இதனால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க, அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News October 28, 2025
சென்னை: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 28, 2025
MONTHA: சென்னையில் மழை தொடரும்..!

சென்னையிலிருந்து 400 கி.மீ தூரத்தில் மோன்தா புயல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 90- 110 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் அக்.31-ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


