News September 29, 2025

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

image

சென்னை, ஐஏஎஸ் அதிகாரிகள் மூவரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக ஆ.அண்ணாதுரை, பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராக ஜான் லூயிஸ், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக [கல்வி] க.கற்பகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 8, 2025

சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 7, 2025

“49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்”

image

சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 96,056 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 49,347 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதில் இன்று மட்டும் 7 மையங்களில் 956 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தியும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டும் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!