News January 24, 2025

சென்னை எழும்பூர் – குமரி குடியரசு தின சிறப்பு ரயில்!

image

குடியரசுதினத்தை ஒட்டி சென்னை எழும்பூரில் இருந்து ஜன.24ஆம் தேதி இரவு 10.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் பகல் 12 மணிக்கு குமரி வந்து சேரும். மறுமார்க்கத்தில் 26ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு குமரியில் இருந்து தாம்பரத்திற்கு சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். SHARE IT.

Similar News

News December 10, 2025

குமரி: ஓடும் பஸ்ஸில் 9 பவுன் நகை பறிப்பு

image

முதப்பன் கோடு ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74). நேற்று (டிச.9) வெட்டுவென்னி கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்ய சென்று விட்டு மதியம் முக்கூட்டுகல் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கிய போது கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை யாரோ அபேஸ் செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அருமனை போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 9, 2025

குமரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு சிறை

image

நாகர்கோவில் சகாய நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56) இவர் கடைக்கு சென்ற 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த மகிளா நீதிபதி தனசேகரன், செல்வராஜுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News December 9, 2025

குமரி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

குமரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!