News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள்<> mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News November 28, 2025

தஞ்சை மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது தஞ்சை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 28, 2025

தஞ்சை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி

image

பட்டுக்கோட்டை கரிக்காடு அண்ணா குடியிருப்பு பகுதியில் பறந்து வந்த ஆண் மயில் ஒன்று மின்சார கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் பிரவீன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயிலை மீட்டனர். மீட்கப்பட்ட மயில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதால், வனத்துறையினர் அதனை குழி தோண்டி புதைத்தனர்.

News November 28, 2025

தஞ்சை: ஒருதலை காதலிக்கு கொலை மிரட்டல்!

image

தஞ்சையை அருகே மானோஜிப்பட்டி சோழன் நகர் பகுதியை சேர்ந்த பரணி (30) என்ற கூலித் தொழிலாளி, தஞ்சையை சேர்ந்த பட்டதாரி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். பெண் காதலிக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பரணி, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின்பேரில் வல்லம் போலீசார் வழக்குப் பதிந்து பரணியை கைது செய்தனர்.

error: Content is protected !!