News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <>mhc.tn.gov.in/recruitment <<>>எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News April 19, 2025

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

News April 19, 2025

புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <>இங்கே கிளிக் செய்யவும்<<>> அல்லது 95429-22022 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் பண்ணவும். இதனை உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.

News April 19, 2025

புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!