News April 15, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

image

சென்னை உயர்நீதி மன்றத்தில் உதவியாளர், எழுத்தர் ( Perosnal Assitant, Personal Secretary, Clerk) உள்ளிட்ட பணிகளுக்கான 47 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ரூ.56,000 முதல் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த 18-37 வயதுக்குட்பட்ட நபர்கள் <>mhc.tn.gov.in/recruitment<<>> எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். இப்போதே SHARE செய்யவும்…

Similar News

News November 13, 2025

திருவாரூர்: பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு

image

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ள கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. இதில் இலவச தொலைப்பேசி எண் 1077 என்ற எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க விரும்பினால் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News November 13, 2025

திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

image

கூத்தாநல்லூர் அருகே உள்ள பெரியகுருவாடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (49). இவர் தனது பைக்கில் குலமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற 27 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவருக்கு, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர்.

News November 13, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!