News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 10, 2025

திருவள்ளூர்: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் (டிச.13) அன்று பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள், புகைப்படம் மற்றும் விரல் ரேகை பதிவு செய்தல் போன்ற பிரச்சினைக்கு உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 10, 2025

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் (டிச.12) அன்று காலை 10 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News December 10, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூரில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (மி.பி.வ), மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ/மாணவியர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையை https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் (டிச.31)க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்தார்.

error: Content is protected !!