News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
Similar News
News November 30, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 30, 2025
கார்த்திகை மகாதீபம்: 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு டிசம்பர் 2 முதல் 5 வரை பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க மாவட்ட காவல்துறை 24 தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நகரின் பல்வேறு வழித்தடங்களில் இந்த நிலையங்கள் செயல்பட உள்ளது. பொதுமக்கள் மாற்று நிலையங்களை பயன்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
News November 30, 2025
தி.மலை: 3 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் வருகிற டிச.3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். ஆதலால், வருகிற டிச.2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


