News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்.

Similar News

News December 1, 2025

விழுப்புரம்: கடனை திருப்பிக்கேட்ட நபர்.. அடி பொளந்த பெண்!

image

விழுப்புரம்: திண்டிவனம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மணிபாலன் (34). இவர் அப்பாவு நகரைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி ராதிகாவுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். பின்னர் ராதிகாவிடம் பணத்தை திருப்பி கேட்டபோது, ஆத்திரமடைந்த ராதிகா, மணிபாலனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ராதிகா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News December 1, 2025

விழுப்புரம்: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து டிச.14க்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

News December 1, 2025

விழுப்புரம்: தட்டிக்கேட்ட முதியவருக்கு கத்திக்குத்து!

image

விழுப்புரம்: எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (68). நேற்று முன்தினம், இரவு 11 மணிக்கு அவரது வீட்டின் அருகே 2 பேர் மதுபோதையில் சத்தமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட தேவராஜை, ஆத்திரத்தில் அந்த 2 பேரும் கத்தியால் குத்தியுள்ளனர். தொடர்ந்து, முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முருகன், (25), ராம்குமார் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!