News April 30, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (29.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News December 12, 2025
சென்னை – ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் காலமானார்

சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர்நேற்று இரவு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ராயப்பேட்டையில் கேமரா பழுதுபார்க்கும் பணியின்போது, 20 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவளித்ததால் ஆயிரக்கணக்கான பறவைகள் அவரைத் தேடி வந்தன. இதனால் இந்திய அளவில் ‘Bird Man of Chennai’ என அழைக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News December 12, 2025
சென்னையில் சீரியல் நடிகை தற்கொலை

சென்னை பிராட்வேவைச் சேர்ந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39), குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த அவர், கணவர் சதீஷுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 12, 2025
சென்னைக்கு வருது ‘டபுள் டக்கர்’ பஸ்!

சென்னையில் முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.


