News April 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (28.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
Similar News
News November 19, 2025
சென்னையில் பெண் மருத்துவர் தற்கொலை… போலீஸ் அதிரடி

சென்னை முகப்பேரில் பெண் மருத்துவர் ஹாருள் சமீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் அசாருதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹாருள் சமீராவை வரதட்சணை கேட்டு அசாருதீன் துன்புறுத்தியது, ஆர்.டி.ஓ விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த அசாருதீனை அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
News November 19, 2025
விசிகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: திருமா

2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என விசிக எம்பி ரவிக்குமார் கூறினார். இது குறித்து சென்னையில் நேற்று (நவ.18) செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால், வரும் 2026 தேர்தலில் அது எங்கள் கோரிக்கையாக இருக்காது. மேலும், பேச்சுவார்த்தை மூலம் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வோம்” என்றார்.
News November 19, 2025
சென்னையில் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி!- DON’T MISS!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.


