News April 22, 2025
சென்னையைச் சேர்ந்த சிறுமி பலி

ஆலந்தூரை சேர்ந்த கார்த்திக் (31), மனைவி சுவேதா, மகள் நிஜிதா (10), உறவினர்கள் பிரசாந்த் (28), வெண்மதி (24) உடன் ஆட்டோவில் வேலூரில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, நேற்றிரவு வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, வாலாஜா டோல்கேட் அருகே வேன் மற்றும் லாரிக்கு இடையே ஆட்டோ நசுங்கியது. இதில், சிறுமி நிஜிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
Similar News
News November 22, 2025
சென்னை: கொலை வழக்கில் ரௌடி சுட்டுப் பிடிப்பு!

சென்னை: இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே மவுலி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ரௌடி விஜயகுமார் என்பவரை காவலர்கள் இன்று (நவ.22) சுட்டு பிடித்துள்ளனர். விஜயகுமார் மீது 2 கொலை முயற்சி வழக்கு உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ரௌடி விஜயகுமார் கத்தியால் தாக்கியதில் காவலர் தமிழரசனுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
News November 22, 2025
சென்னை: செல்லப் பிராணிகள் வளர்போர் கவனத்திற்கு!

சென்னையில் தெருநாய்கள், நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுக்க, ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம். இதற்கான பணிகள், மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில், கடந்த அக்.8 முதல் இலவசமாக செய்யப்பட்டு வருகின்றன. நவ.23க்குள் உரிமம் பெறாவிட்டால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம், டிச.7 வரை 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
சென்னை: அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் சில அத்தியாவசிய மருந்துகள் தற்காலிகமாக கிடைக்காமல் உள்ளன. மாநில மருத்துவ சேவை அமைப்பு சில மருந்துகளின் வழங்கலை நிறுத்தியதால், மருத்துவமனைகள் தற்போது அவசியமான மருந்துகளை தனியார் விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மருந்து பெறுவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


