News August 8, 2025
சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 8, 2025
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ.. தள்ளிப்போகும் திறப்பு விழா?

சென்னை, பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், சில ரயில் நிலையங்களில் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு தாமதமாவதால், ஜனவரியில் மெட்ரோ திறக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 8, 2025
வெளிநாட்டு பறவைகள் சென்னை வருகை!

சென்னை அடையாறு நோக்கி வெளிநாட்டுப் பறவைகள் இன்று வந்துள்ளது. அழகாக காட்சியளிக்கும் கூவம் நதிக்கரையில் பறவைகள் பறந்து வருகிறது. சென்னையில் உள்ள நீர் நிலைகளை சென்னை மாநகராட்சி சரியான நேரத்தில் தூர்வாரி சுத்தம் செய்துள்ளதே வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இந்த பறவைகளை அந்த பகுதியில் செல்பவர்கள் பார்த்து செல்கின்றனர்.
News December 8, 2025
இன்டிகோ – 71 விமானங்கள் ரத்து, பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் இன்டிகோ விமான சேவைகள் இன்று ஐந்தாவது நாளாக 71 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதில் வருகை விமானங்கள் 33, புறப்பாடு விமானங்கள் 38 ரத்து செய்யப்பட்டன. கவுகாத்தி, டில்லி, மும்பை, பூனா, கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூர், அகமதாபாத், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வருகை விமானங்கள் பாதிக்கப்பட்டன. தொடர்ச்சியான ரத்தால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


