News September 13, 2024
சென்னையில் 100% மின் விநியோகம் வழங்கப்பட்டது

சென்னை மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் நேற்றிரவு முழுவதும் சென்னையின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100% மின்சாரம் விநியோகம் தொடங்கப்பட்டதாகவும், மின்தடையால் மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மின்தடை நீடிக்கிறதா?
Similar News
News November 19, 2025
சென்னை மக்களே மிஸ் பண்ணவேண்டாம்!

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் நவ.21 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 9499966026 எண்ணை அழைக்கலாம். மிஸ் பண்ணாதீங்க. SHARE IT
News November 19, 2025
சென்னையில் ED ரெய்டு; காலையில் அதிரடி!

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகள் மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


