News April 27, 2025
சென்னையில் விமானத்தின் டயர் வெடிப்பு

சென்னையில் இருந்து 166 பயணிகளுடன் மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுதளத்திலேயே வெடித்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, விமானத்தின் டயர் திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து, பழுதடைந்த டயர் மாற்றப்பட்டு, இரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு சம்பவம் சென்னையில் பரபரப்பை உருவாக்கியது.
Similar News
News April 28, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (27.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 27, 2025
சென்னை சிவன் கோயில்கள் பட்டியல்

▶அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்
▶ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்
▶எழும்பூர் அர்த்தநாரீசுவரர் கோயில்
▶சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோவில்
▶தண்டையார்பேட்டை அருணாச்சலேசுவரர் கோயில்
▶திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்
▶நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
▶ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
▶திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
▶முகப்பேர் மார்கண்டேசுவரர் கோயில்
▶பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில்
News April 27, 2025
ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க