News April 28, 2025
சென்னையில் ‘ரெட் பட்டன் ரோபோட்டிக் காப்’ அறிமுகம்

சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 200 ‘ரெட் பட்டன்-ரோபோட்டிக் காப்’ சாதனங்கள் நகரின் முக்கிய இடங்களில் நிறுவப்படுகின்றன. 24×7 கண்காணிப்பு, அவசர அழைப்பு வசதி, வீடியோ கால் மூலம் காவல் துறை உதவி போன்ற அம்சங்கள் உள்ள இந்த சாதனம், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*
Similar News
News November 27, 2025
விஜய்க்கு திருமா எச்சரிக்கை!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னையில் இன்று (நவ.26) செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இது செங்கோட்டையனின் தன்னிச்சையான முடிவா? என தெரியவில்லை. மேலும், தவெக தலைவர் விஜய் கவனமாக இருக்க வேண்டும். தவெகவில் ஊடுருவல்கள் அதிகரித்தால், அவர் அரசியல் கேள்விக்குறியாக மாறும்” என்று கூறினார்.
News November 26, 2025
சென்ட்ரல்-அரக்கோணம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயிலும், அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
News November 26, 2025
15 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, காஞ்சிபுரம், வேலூரில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்குச் சொந்தமான 15 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வரும் நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


