News April 1, 2025
சென்னையில் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும். இது முந்தைய நிதியாண்டைவிட ரூ.275 கோடி அதிகம்.
Similar News
News October 19, 2025
சென்னை- பெங்களூர் விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமான பொறியாளர்கள் இயந்திர கோளாறை சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் உயிர் தப்பினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News October 19, 2025
BREAKING: சென்னையில் MLA மீது வழக்கு பதிவு

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலர் பிரபாகரை தாக்கியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ்.ராஜகுமார் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கையால் தாக்குதல் என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு, பிரச்சினைக்குரிய காரை எம்எல்ஏ ஓட்டுனரிடம் ஒப்படைத்தனர்.
News October 19, 2025
கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் காய்கறி, பழம், பூக்கள் வரத்து நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணிபுரியும் இந்த சந்தையில், அந்நாளில் வர்த்தகம் நடைபெறாது.