News April 15, 2025
சென்னையில் மீன் பிடிக்க தடை

சென்னையில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டும் ஏப்.14 நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாள்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. விசைப் படகுகளுக்கு மட்டுமே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட செயற்கை இழுவை படகுகள், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கத் தடையில்லை. மேலும், மீனவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.8,000 வழங்கப்படுகிறது.
Similar News
News January 8, 2026
சென்னை: போஸ்ட் ஆபீஸில் வேலை- NO EXAM!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News January 8, 2026
BREAKING: மெரினாவில் கடைகளை அகற்ற உத்தரவு!

சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது 1,417 கடைகள் உள்ள நிலையில், அனைத்து கடைகளையும் நீக்கிவிட்டு குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், தலா 100 கடைகள் வீதம், பொம்மைகள், உணவகம், ஃபேன்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
News January 8, 2026
சென்னை: அனைத்து Certificate- உம் இனி ஆன்லைனில்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <


