News September 13, 2024
சென்னையில் மின்தடை குறித்து அமைச்சர் விளக்கம்

சென்னை மணலி துணைமின் நிலையத்தில் எதிர்பாராதா தீ விபத்தால் சென்னையின் சில பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை மின்சார வாரியத்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நள்ளிரவு 2 மணியளவில் மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் வழங்கப்பட்டது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
சென்னை மக்களே கொண்டாட்டத்துக்கு ரெடியா?

தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை வெளிப்படுத்தும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜனவரி 14, 2026 மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகரின் 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
News December 23, 2025
கிறிஸ்துமஸ் பண்டிகை: மின்சார ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், கடற்கரை -செங்கல்பட்டு, சென்ட்ரல் -அரக்கோணம், சென்ட்ரல் -கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை உள்ளிட்ட மின்சார ரயில் வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 மணி 2மணி வரை செயல்படும்.
News December 23, 2025
சென்னை: புது மனைவியை கொன்ற கணவன்!

சென்னை குன்றத்தூரில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 9 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கு குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கணவர் காதல் மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


