News January 23, 2025
சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், வரும் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும் வேப்பரியில் இன்று (ஜன.23) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நாசவேலை எதிர்ப்பு சோதனை, வெடிபொருள் கண்டறிதல் உள்ளிட்டவை மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News December 7, 2025
சென்னையில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

சென்னை போரூர் அருகே ஐயப்பன்தாங்கல் சுப்பையா நகர் பகுதியில், நேற்று பாலசுப்பிரமணியின் 8 வயது மகன், தனது அக்காவுடன் டியூஷனுக்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த தெரு நாய் அவரை தாக்கியது. இதனால் சிறுவனுக்கு முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமேற்பட்டது. அருகிலிருந்தவர்கள் மீட்டு, அவரை பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
News December 7, 2025
சென்னை விமான நிலையத்தில் 96 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் நேற்று முதல் இரவு 11.50 மணி வரை 44 வருகை, 52 புறப்பாடு என மொத்தம் 96 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்டிகோ விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை 7ம் தேதி பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படும் எனவும், 10ம் தேதி வரை இதே நிலைமை நீடிக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
News December 6, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


