News April 21, 2025
சென்னையில் நுங்கு விற்பனை அமோகம்

சென்னையில், நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சூட்டை தணிக்கும் நுங்கு, தர்பூசணி, இளநீர், பழக்கடைகளை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். போருர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3 நுங்கு ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வரை விற்கப்படுகிறது.
Similar News
News December 1, 2025
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை (டிச.2) நடக்கவிருந்தது. இந்த நிலையில், ‘டிட்வா’ புயலின் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 1, 2025
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு

சென்னையில் இன்று (டிச.1) காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி
நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மேலும் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.
News December 1, 2025
JUST IN: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!


