News August 9, 2024
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமை வேலைநாள் ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமை பள்ளி வேளை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வேலை நாள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2025
சென்னையில் ED ரெய்டு; காலையில் அதிரடி!

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகள் மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
சென்னையில் இரண்டு நாள் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.


