News August 14, 2024
சென்னையில் நாளை அமைச்சர்கள் பங்கேற்கும் சமத்துவ விருந்து

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள 31 கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் நடைபெறவுள்ள சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். அதன்படி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மற்ற பிற கோயில்களில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
Similar News
News November 17, 2025
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

சென்னையின் நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சென்னை மேற்கு, தெற்குப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 5வது சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், தொலைதூர மற்றும் சரக்கு வாகனங்களை நகருக்கு வெளியே திசை திருப்பும். அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் வெளிவட்டச் சாலை வரை புதிய இணைப்புகள் உருவாக்கப்பட்டு, பரந்தூர் விமான நிலையப் போக்குவரத்து எளிதாக்கப்படும்.