News May 10, 2024
சென்னையில் நகை கடையில் குவிந்த பொதுமக்கள்

சென்னையில் அட்சய திரிதியைக்காக நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை, குரோம்பேட்டை, பாடி, அண்ணாநகர், தாம்பரம் ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகைகள் வாங்குவதற்காக இன்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை ஆர்வமுடன் வாங்கினர்.
Similar News
News October 31, 2025
சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 31, 2025
சென்னை: இனிப்பு சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்!

ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). வழக்கறிஞரான இவர் கடந்த 28ம் தேதி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்வீட் கடையில், இனிப்பு வாங்கி குடும்பத்துடன் சாப்பிட்ட போது, சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மண்கண்டன் நேற்று, கடையில் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் விசாரிக்கின்றனர்.
News October 31, 2025
சென்னை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


