News October 25, 2024
சென்னையில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள 2 ஓட்டல்களுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள (ரெஸிடென்சி, ராஜ் பார்க்) 2 ஓட்டல்களுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தி.நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிய வந்தது. தொலைபேசி எண்ணை வைத்து யார் அந்த நபர் என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Similar News
News October 19, 2025
சென்னையில் நிவாரண மையங்கள் அதிகரிப்பு

சென்னை, அக்டோபர் 22 மற்றும் 23 தேதிகளில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், கிரேட்டர் சென்னை மாநகராட்சி நிவாரண மையங்களை 116 லிருந்து 215 ஆக உயர்த்தியுள்ளது. மின்தடை ஏற்படாத வகையில் அனைத்து மையங்களிலும் ஜென்செட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பாய்கள், போர்வைகள், கொசு சுருள்கள், உணவு வசதி மற்றும் 106 சமையல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
News October 19, 2025
சென்னைக்கு ஆரஞ்ச் அலெர்ட்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் அக்.23ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், தீபாவளி மறுதினம் கனமழை பெய்யும் எனவும், 22, 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. ஷேர் பண்ணுங்க.
News October 19, 2025
சென்னை: 29,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் இந்த <