News January 23, 2025
சென்னையில் தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி

சென்னையில் அடுத்த மாதம் முதல் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மணலி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே அரசு மினி பஸ்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதல் சேவைக்காக முதல் முறையாக தனியார் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News December 16, 2025
ஜனவரியில் திறக்கப்படும் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ!

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் கீழ், பூந்தமல்லி – போரூர் இடையேயான 9 கி.மீ பாதையில் 2026 ஜனவரியில் ரயில் சேவை தொடங்க உள்ளது. நெரிசல் நேரங்களில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும். இதற்காக 13 மூன்று பெட்டி ரயில்கள் பயன்படுத்தப்படும் எனவும், இவை ஓட்டுநர் இல்லா தொழில்நுட்பம் கொண்டவை என்றாலும், ஆரம்பத்தில் ஓட்டுநர்களுடனே இயங்கும் என CMRL அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 16, 2025
சென்னை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 16, 2025
சென்னையில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு!

இன்று (டிச-16) சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதன்படி செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறவில்லை எனில் இன்று முதல் வீடு வீடாக ஆய்வு செய்து ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிபிடதக்கது.


