News January 24, 2025
சென்னையில் ட்ரோன் பறக்க தடை

குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.25, 26) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலும் அதேபோல் முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
சென்னை வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16 முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6 முதல் 10 வரை சென்னை மக்கள் இரவு 8 மணி முதல் 8.05 மணி வரை ISS-ஐ வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும்.
News July 5, 2025
சென்னையில் நாளை மினி மாரத்தான்

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
News July 5, 2025
பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்க அறிவுறுத்தல்

சென்னை குடிநீர் வாரியம் பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓடும் குழாய்க்குப் பதிலாக குவளையைப் பயன்படுத்தினால் ஒருமுறைக்கு 4.25 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். ஓடும் குழாய் 5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், குவளை வெறும் 0.75 லிட்டர் மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.