News January 24, 2025
சென்னையில் ட்ரோன் பறக்க தடை

குடியரசு நாளையொட்டி சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜன.25, 26) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு நாள் விழா அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சென்னை ராஜ் பவன் முதல் மெரினா கடற்கரை வரையிலும் அதேபோல் முதல்வர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரையிலும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
சென்னை ஒன் மூலம் பஸ் பாஸ்

சென்னை ஒன் செயலியின் வெற்றியைத் தொடர்ந்து, CUMTA மாதாந்திர டிஜிட்டல் பேருந்து பாஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது. நவம்பர் மத்தியில் அறிமுகமாகும் இந்த பாஸ்களின் விலை ரூ.1,000-ரூ.2,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மாதத்திலேயே 4.6 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்ற ‘சென்னை ஒன்’ செயலியின் அடுத்தகட்டமாக, டிசம்பரில் மெய்நிகர் கட்டண வாலட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!
News October 29, 2025
மாரி செல்வராஜை வாழ்த்திய துரை வைகோ

சென்னையில் பைசன் படத்தை பார்த்தபின் MP துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பைசன் காட்டெருமை போன்ற வலிமையான கபடி வீரனையும், காளமாடனையும் இணைத்து நுட்பமான ஆயிரம் செய்திகளை திகட்டாத திரைமொழி மூலமாக என் அன்பு தம்பி இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கியுள்ளார். இருவேறு சமூகத்தினர் இடையே ஒற்றுமையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மாரி செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார் என குறிப்பிட்டார்.


