News March 26, 2025
சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. இதனால் மார்ச்.29 அன்று காலை 10 மணி முதல் மார்ச்.30 அன்று காலை 10 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 28, 2025
MONTHA: சென்னையில் மழை தொடரும்..!

சென்னையிலிருந்து 400 கி.மீ தூரத்தில் மோன்தா புயல் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 90- 110 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் அக்.31-ம் தேதி காலை 10 முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News October 28, 2025
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.28) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


